பா.ஜ., மண்டல நிர்வாகிகள் கூட்டம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பா.ஜ., மண்டல நிர்வாகிகள் கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2021
06:04

விழுப்புரம், : விழுப்புரத்தில் பா.ஜ., சார்பில் மண்டல நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு தியாகராஜன், கலிவரதன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொது செயலாளர்கள் ராமஜெயக்குமார், பாண்டியன், பொருளாளர் சுகுமார் உட்பட 30 மண்டல தலைவர்கள்



பங்கேற்றனர்.இதில், பெட்ரோல், டீசல் வாட் வரியை மாநில அரசு குறைக்க வேண்டும். அம்பேத்கர் நினைவு நாளை யொட்டி, இன்று (6ம் தேதி) காலை 9.00 மணிக்கு விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர தலைவர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X