திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதான கல்லுாரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு மகிளா கோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டி சுரபி நர்சிங் கல்லுாரியில் மாணவியருக்கு தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், விடுதி வார்டன் அர்ச்சனா உடந்தையாக இருந்ததாகவும் புகார்கள் வந்தன. தாடிக்கொம்பு போலீசார் இருவர் மீதும் போக்சோவில் வழக்குப் பதிவு செய்து, வார்டன் அர்ச்சனாவை 23, கைது செய்தனர். தலைமறைவாக இருந்த தாளாளர் ஜோதிமுருகன் நவ.24ல் திருவண்ணாமலை போளூர் கோர்ட்டில் சரணடைந்தார்.
நிபந்தனை ஜாமின்
ஜோதிமுருகனை தாடிக்கொம்பு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை டிச.10 வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ஜோதிமுருகன் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து, அவருக்கு 2 போக்சோ வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கி, தினமும் வடமதுரை போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி புருேஷாத்தமன் உத்தரவிட்டார். ஜோதிமுருகன் அவரது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைத்தார்.