முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுஷ்டிப்பு | தேனி செய்திகள் | Dinamalar
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுஷ்டிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2021
06:10

பெரியகுளம் : பெரியகுளம் ரவீந்திரநாத் எம்.பி., அலுவலகம் முன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

ஜெயலலிதா படத்துக்கு தேனி ஆவின் தலைவர் ஓ.ராஜா, ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, நகர செயலாளர் ராதா, நகர துணை செயலாளர் அப்துல் சமது, மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், நிர்வாகிகள், தொண்டர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். நகர், ஒன்றிய வார்டுகளில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

* ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்., சிலை அருகே ஜெயலலிதா படத்திற்கு அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், பொதுக்குழு உறுப்பினர் சேட்டு அருணாசலம் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

* போடியில் பஸ் ஸ்டாண்ட் அருகே அ.தி.மு.க., நகர செயலாளர் பழனிராஜ் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. துணை செயலாளர் ஜெயராம், பொருளாளர் ரமேஷ், ஜெயலலிதா பேரவை முன்னாள் செயலாளர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

* சில்லமரத்துப்பட்டியில் ஒன்றிய செயலாளர் சற்குணம் தலைமையில் ஜெயலலிதா பேரவை மாவட்ட பொருளாளர் குறிஞ்சி மணி, மாவட்ட பிரதிநிதி நடேஷ், துணை செயலாளர் சுந்தராஜன் ஜெ., படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X