சின்னாளபட்டி : ஏ.வெள்ளோடு அருகே கரட்டழகன்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ் 52, திண்டுக்கல் ஓட்டல் தொழிலாளி. மனைவியின் நகைகளை பாலகிருஷ்ணாபுரம் வங்கியில் அடகு வைத்திருந்தார்.
அதை திருப்புவதற்காக நண்பர்களிடம் வாங்கிய நகையை, அம்பாத்துறை தேசிய வங்கியில் அடகு வைத்தார். இத்தொகை ரூ.1.10 லட்சத்தை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்தார். கடையில் டீ குடித்து விட்டு வந்து பார்த்தபோது பணம் மாயமாகி இருந்தது. கண்காணிப்பு கேமரா பதிவுகளில், இருவர் வங்கியில் இருந்து பின்தொடர்வது பதிவாகியுள்ளது. அம்பாத்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.