பெண்களுக்கு இலவச காஸ்
திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் எட்டமநாயக்கன்பட்டியில் மத்திய அரசு திட்டத்தில் பெண்களுக்கு இலவச காஸ் வழங்கப்பட்டது. பா.ஜ., கிழக்கு மாவட்ட செயலாளர் கங்காதரன், அப்பகுதியில் உள்ள 20 பெண்களுக்கு மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் இலவச காஸ் சிலிண்டர், எல்.இ.டி., பல்புகளை வழங்கினார். பள்ளி மாணவர்களுக்கு இலவச மரக்கன்று வழங்கப்பட்டது. திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஓட்டல்காரர் மாயம்
வடமதுரை: அய்யலூர் பாச்சா நாயக்கனூரைச் சேர்ந்த ரங்கராஜ் மகன் கோபாலகிருஷ்ணன் 28. அரசு ஆரம்ப சுகாதார நிலைய ரோடு பிரியும் இடத்தில் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த நவ. 23ல் திண்டுக்கல் சென்று வருவதாக கூறி சென்றவர் ஊர் திரும்பவில்லை. வடமதுரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜெ., நினைவு நாள் அனுசரிப்பு
வேடசந்தூர்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அ.தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர். வேடசந்துார் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஜெ., புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் காளியப்பன், ராமலிங்கம், ராணி, தேன்மொழி, தங்கராஜ், தேவசகாயம், புஷ்பவள்ளி, ஜானகி பங்கேற்றனர்.