திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.,வினர் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் மாவட்ட இளைஞர் அணி தலைவர் திருமாறன், இணை செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் சரவணன், நகர மாணவரணி செயலாளர் சின்னு, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் நாகராஜன், ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் முனிசாமி, ஒன்றிய கழக துணை செயலாளர் கனிராஜன், மாநகர் 1வது வார்டு பிரதிநிதி கணேசன், மாவட்ட போக்குவரத்து தொழிற்சங்க ஜெயபிரகாஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ராஜதுரை பங்கேற்றனர்.நத்தம்: -நத்தம் அ.தி.மு.க., சார்பில் ஒன்றிய குழுதலைவர் கண்ணன் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதில் நகரச் செயலாளர் சிவலிங்கம், நத்தம் ஒன்றிய செயலாளர்கள் சின்னு, மணிகண்டன், சாணார்பட்டி ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, ராமராஜ் தலைமை வகித்தனர். அவைத்தலைவர் சேக் ஒலி, பொருளாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பிறவிக் கவுண்டர், மாவட்ட கவுன்சிலர் பார்வதி உள்பட பலர் பங்கேற்றனர். கோபால்பட்டி மற்றும் ரெட்டியபட்டியிலும் அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.வடமதுரை: காந்தி திடலில் நகர அ.தி.மு.க., சார்பில் செயலாளர் பாலசுப்ரமணி தலைமையில் மாணவரணி செயலாளர் மணி, இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் ஆதிநாராயணன், ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் செந்தில் ஆண்டவர் பங்கேற்றனர். தென்னம்பட்டியில் முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகர், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மருதை, பி.பழனிச்சாமி கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரத்தில் நகரச் செயலாளர் எஸ்.நடராஜன், ஒன்றியச் செயலாளர்கள் பாலசுப்பிரமணி, என்.பி. நடராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.