பழநி : பழநியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, கனடா இந்தியா கூட்டமைப்பு திட்டத்தின் கீழ் இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் துறைக்கு தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையப்பமிடும் நிகழ்ச்சி நடந்தது. இதனை கல்லூரி முதல்வர் கந்தசாமி துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வாகனங்களின் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க நடவடிக்கைகள், மின் வாகனங்களின் பயன்பாடுகள் ஆகியவை விளக்கப்பட்டது. இதில் இயந்திரவியல் துறைத் தலைவர் பத்மநாபன், தனியார் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கார்த்திக் குமார், செயல் தலைவர் சரவணன் மற்றும் கனடா - இந்தியா கூட்டமைப்பு திட்ட மேலாளர் ராஜன், பயிலக மேலாளர் ரவீந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.