வேடசந்தூர் : வேடசந்துார் அருகே காதல் கணவன் கைவிட்டதால் அவரது வீட்டு முன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.-
வேடசந்தூர் அருகே விட்டல் நாயக்கன்பட்டி ராஜரத்தினம், தமிழ்ச்செல்வி தம்பதியின் மகன் வீரக்குமார் 25. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் படித்தபோது, உடன் படித்த ஜீவா 25, என்ற மாணவியை காதலித்து பதிவு திருமணம் செய்தார். அவரவர் வீட்டில் இருந்தபடி கணவன்-, மனைவியாக வசித்தனர்.
ஜீவாவுக்கு மாப்பிள்ளை பார்த்தபோது, அவருக்கு திருமணம் ஆனது பெற்றோருக்கு தெரிந்தது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் நடந்தது. அதன்பின்பு ஜீவா வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், வீரக்குமாரின் பெற்றோர் மணமக்களை பிரித்து வைக்க முயன்றனர்.வடமதுரை மகளிர் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினர்.
வீரக்குமார் தனது மனைவி ஜீவாவை, மதுரையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் சிலநாட்கள் இருக்கும்படி கூறிவிட்டு வந்தார். ஓராண்டு ஆகியும் கணவர் வராததால், ஜீவா விட்டல்நாயக்கன் பட்டியில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்தார்.அவரை மாமியார் தமிழ்ச்செல்வி தடுத்ததால் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஜீவா ஈடுபட்டார். கணவர் வீரக்குமார், மாமியார் தமிழ்ச்செல்வி வீட்டை பூட்டிவிட்டு வெளியேறினர். வேடசந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.