பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2021
06:22

பழநி : பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு மாலையணிந்த ஐயப்ப மற்றும் முருக பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.



பழநி மலைகோயிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகளவில் இருந்தது. டிச.6, ஐ முன்னிட்டு போலீசார் பக்தர்களை சோதனை செய்து அனுப்பினர். தங்கக் கோபுரம் மற்றும் தங்கரதத்திற்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.கிரிவீதி, சன்னதி வீதி, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வெளி மாநில மாவட்ட பக்தர்கள் கூட்டம் நிறைய இருந்தது. நீண்ட வரிசையில் வின்ச் ஸ்டேசனில் காத்திருந்து மலைக்கோயில் சென்றனர்.

ரோப், வின்ச்' படிப்பாதை வழியே பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்று பழநியாண்டவரை தரிசித்தனர்.வாகனங்களை நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி இருந்தனர். ஜவஹர் வீதி பகுதியில் குறுகலான பாதையில் வாகனங்களை நிறுத்தி இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். முறையாக அனுமதிக்கப்பட்ட வாகன நிறுத்தங்களை மற்றும் வாகனங்களை நிறுத்த போலீசார் அறிவுறுத்த வேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X