சிவகங்கை : சிவகங்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் உட்பட நிர்வாகிகள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
சிவகங்கையில் நடந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் என்.எம்.ராஜா, சிவகங்கை தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி, அவைத்தலைவர் வி.ஆர்.பாண்டி, முன்னாள் நகராட்சி சேர்மன் அர்ச்சுனன், மாவட்ட கவுன்சிலர் ராமசாமி, மாவட்ட மகளிரணி பொருளாளர் கயல்விழி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச்செயலாளர் இளங்கோவன், மற்றும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஜெயலலிதா படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.* தமறாக்கியில் மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் கருணாகரன், கூட்டுறவு அச்சகத்தலைவர் சசிக்குமார், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.காரைக்குடிஐந்து விளக்கில் அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர்.
நகரத் தலைவர் மெய்யப்பன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை துணைச்செயலாளர், கோவிந்தன், இளைஞரணி தேவன், சாக்கோட்டை ஒன்றியச் செயலாளர் செந்தில்நாதன், சின்னத்துரை மற்றும் மகளிரணியினர் சித்ராதேவி, சுலோச்சனா, ஷோபியா ப்ரான்ஸ், லலிதா, அமுதா மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
தேவகோட்டை
சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அலுவலகத்தில் மாவட்ட வர்த்தக பிரிவு இணை செயலாளர் வடிவேல் முருகன், மதி ஜெ., படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். புவனேஸ்வரி அம்மன் கோயில் அருகிலும் , பஸ் ஸ்டாண்ட் அருகிலும் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட மாணவர் அணி செயலாளர் சுந்தரலிங்கம், மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் ராமனாதன். நகர செயலாளர் ராமச்சந்திரன் , அனைத்து பிரிவு நிர்வாகிகள் தனசேகரன், துரைராஜ், கார்த்திகேயன், சிங்கமுகம் , சிக்கந்தர், சர்வேயர் ராஜேந்திரன் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிர்லா கணேசன், நிர்வாகிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.