வீட்டு காய்கறி தோட்டம் மானிய விலையில் 'கிட்' | திருப்பூர் செய்திகள் | Dinamalar
வீட்டு காய்கறி தோட்டம் மானிய விலையில் 'கிட்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2021
09:05

திருப்பூர்: ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில், மாடித்தோட்டம் அமைத்தல், வீட்டு காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டங்களில், மானிய விலையில், 'கிட்' வழங்கப்படுகிறது.



மாடித்தோட்டம் அமைக்க, வெண்டை, கொத்தவரை, காய்கறி பொரியல் தட்டை, தண்டங்கீரை, புடலை, முருங்கை விதையும், அதற்குரிய பைகள், 'கம்போஸ்ட்', உயிர் உரங்கள், வழிகாட்டி புத்தகம் ஆகியவை வழங்கப்படுகின்றன.மாடித்தோட்டம் 'கிட்', 900 ரூபாய் மதிப்புள்ளது; அரசு மானியம், 675 ரூபாயுடன், பயனாளிகள், 225 ரூபாய் செலுத்தி பெற்று கொள்ளலாம். பீன்ஸ், பாகற்காய், மஞ்சள் பூசணி, முருங்கை, பீர்க்கன், புடலை உட்பட, 12 வகையான காய்கறி விதைகளும் உள்ளன. ஊட்டச்சத்து காய்கறி 'கிட்', 100 ரூபாய் மதிப்புள்ளது, 25 ரூபாய்க்கு வழங்கப்பட உள்ளது.

தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வீடுகளிலும், வீட்டு மாடியிலும், ஊட்டச்சத்து மிகுந்த காய்கறி, பழவகை செடிகளை வளர்க்கலாம். அதற்காக, 75 சதவீத மானியத்துடன், 'கிட்' வழங்கப்படும். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X