கோபி: பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால், கடந்த, அக்.,12 முதல், கொடிவேரி தடுப்பணையில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நவ.,19ல், அதிகபட்சமாக திறந்த 10,200 கன அடிநீரால், தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதுமுதல் அடிக்கடி உபரிநீர் திறப்பால் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், தடுப்பணைக்குள் சுற்றுலா பயணிகள் நுழைய தடை நீடிக்கிறது. நேற்று காலை வினாடிக்கு, 4,500 கன அடி திறக்கப்பட்ட உபரிநீர், கொடிவேரி தடுப்பணையில் இருந்து பவானி ஆற்றில் கரைபுரண்டு ஓடியதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 55வது நாளாக நேற்றும் தடை தொடர்ந்தது. மாவட்ட நிர்வாகத்தின் மறு உத்தரவுக்கு பின்பே, பயணிகள் அனுமதிக்கப்படுவர், அதுவரை தடை தொடரும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.