புன்செய்புளியம்பட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஐந்தாமாண்டு நினைவு நாளையொட்டி, பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி தலைமைமையிலான தொண்டர்கள், புன்செய்புளியம்பட்டியில் நேற்று ஊர்வலமாக வந்தனர். பஸ் ஸ்டாண்ட் முன்புறம், அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெ., போட்டோவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர கழக செயலாளர் மூர்த்தி, பொறுப்பாளர், தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் பவானிசாகர் ஒன்றியத்தில், 50க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில், ஜெ., நினைவு தினத்தை கட்சியினர் அனுசரித்தனர்.