பெருந்துறையில் ஜெ.,வுக்கு அஞ்சலி | ஈரோடு செய்திகள் | Dinamalar
பெருந்துறையில் ஜெ.,வுக்கு அஞ்சலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2021
10:21

பெருந்துறை: ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, பெருந்துறை தொகுதி அ.தி.மு.க., சார்பில், பெருந்துறை- குன்னத்தூர் நால்ரோடு அருகில், ஜெ., உருவப்படத்துக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் கருப்பணன், ஜெயக்குமார் வழிகாட்டுதல் படி, பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள் ஜோதி செல்வராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித் ராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன், பெருந்துறை செயலாளர் கல்யாணசுந்தரம், பேரூர் துணை செயலாளர் சிவகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் அருணாசலம், மாவட்ட மகளிரணி செயலாளர் உமா நல்லசாமி,சேர்மன் சாந்தி ஜெயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ஈரோடு சாலையில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கும் சென்று, ஜெ., உருவப்படத்துக்கு மரியாதை செய்தனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X