பெருந்துறை: பெருந்துறை அருகே, சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர், கைது செய்யப்பட்டார். பெருந்துறை அருகேயுள்ள காரண்டிபாளையத்தை சேர்ந்த, ?? வயது சிறுமி, பிளஸ் ? படிக்கிறார். உறவினரான ஆட்டோ டிரைவர் கவின்குமார், 19, சிறுமியிடம் பழகி வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, நெருங்கி பழகியதில், சிறுமி கர்ப்பமடைந்தார். இதையறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். புகாரின்படி பெருந்துறை போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கவின்குமாரை, நேற்று கைது செய்தனர்.