ஓவர் போதையால் விபரீதம்: சாக்கடையில் விழுந்து பலி | ஈரோடு செய்திகள் | Dinamalar
ஓவர் போதையால் விபரீதம்: சாக்கடையில் விழுந்து பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2021
10:25

ஈரோடு: கருங்கல்பாளையத்தில், அதீத குடிபோதையில் சாக்கடையில் விழுந்த வாலிபர் பலியானார். ஈரோடு, கருங்கல்பாளையம், வீரா வீதியில், டாஸ்மாக் கடை முன்புறம் நேற்று காலை, 7:00 மணியளவில் வாலிபர் இறந்து கிடந்தார். கருங்கல்பாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதில் அதே பகுதி கல்லு பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த பாண்டியன் மகன் ராஜா, 28, என தெரிந்தது. பாண்டியனிடம் போலீசார் விசாரித்தனர். திருமணமாகாத ராஜா, கிடைக்கும் வேலைக்கு சென்று வந்தார். பணத்தை வீட்டுக்கு தராமல் மது குடித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சாக்கடை ஓரம் அமர்ந்து மது குடித்துள்ளார். தந்தை வீட்டுக்கு வருமாறு அழைத்தும் வரவில்லை. போதை அதிகமாகி சாக்கடையில் விழுந்ததில் இறந்ததும் தெரிய வந்தது. ஈரோடு அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. பாண்டியன் புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X