ஆத்தூர்: நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே, அரியாகவுண்டன்பட்டி, மேற்குகாட்டுவளவை சேர்ந்த விவசாயி சுப்ரமணி, 74, நிலப்பிரச்னையில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, ஆத்தூர் ஊரக போலீசார், தி.மு.க.,வின், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் பெருமாள் உள்பட ஆறு பேர் மீது வழக்கு பதிந்தனர். இதில், கூலிப்படையை சேர்ந்த, தி.மு.க., நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராமதாஸ், அறிவழகன், முஸ்தபா, தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமதாஸ், அறிவழகனை, இரு நாள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். மூன்றாம் நாளாக, கல்பகனூர், சிவகங்காபுரத்தில் உடலை தேடும் பணியில் போலீசார், வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். 120 அடி தூரத்துக்கு, 10 அடி ஆழத்துக்கு மேல் தோண்டியும் கிடைக்கவில்லை.