ஓமலூர்: கவர்னர் வருகை ரத்தான நிலையில், பெரியார் பல்கலையில் இன்று பட்டமளிப்பு விழா நடக்கிறது. சேலம், கருப்பூர் பெரியார் பல்கலையில், 20வது பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. அதில் தமிழக கவர்னர் ரவி, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்குவதாக இருந்தது. ஆனால், கவர்னர் வருகை ரத்து செய்யப்பட்டதாக, நேற்று தகவல் வெளியானது. இதுகுறித்து, பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் கூறுகையில், ''கவர்னர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பெங்களூரு இந்திய அறிவியல் கழக இயக்குனர் கோவிந்தன் ரங்கராஜன், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கின்றனர்,'' என்றார்.