வீடுகளில் மழைநீருடன் புகும் கழிவுநீர்: மண்டல அலுவலகத்தை மக்கள் முற்றுகை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
00:02

அனுப்பர்பாளையம்:வீடுகளில் மழைநீருடன், கழிவுநீரும் கலப்பதால், தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தி, இரண்டாம் மண்டல அலுவலகத்தை, அ.தி.மு.க.,வினர் முற்றுகையிட்டனர்.திருப்பூர் மாநகராட்சி, 20வது வார்டு அ.தி.மு.க., வார்டு செயலாளர் விஜயகுமார், ஜெ., பேரவை துணை செயலாளர் நீதிராஜன், முன்னாள் கவுன்சிலர் ரங்கசாமி ஆகியோர் தலைமையில், 300க்கும் மேற்பட்டோர் நேற்று 2ம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதன்பின், உதவி கமிஷனர் கண்ணனை சந்தித்து மனு கொடுத்தனர்.மனு விபரம்:பாதாள சாக்கடை பணியால் ரோடு சேறும் சகதியுமாக குண்டும் குழியுமாக உள்ளதால், அசம்பாவிதம் நடக்கும் முன்பு சாலையை சமன் செய்து பொது மக்கள் சிரமமின்றி பயணிக்க வழி வேண்டும். நஞ்சப்பா நகர் சமுதாயக்கூடம் பராமரிப்பு பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பணியை விரைவுபடுத்த வேண்டும்.போயம்பாளையம் ஏ.டி., காலனியில் உள்ள வீடுகளில் சிறிய மழை பெய்தாலும் மழை நீருடன் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக்கொண்ட உதவி கமிஷனர் கண்ணன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதனால், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X