உடற்பயிற்சி கூடங்களுக்கு தேவை பிசியோதெரபிஸ்ட்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
00:36

மதுரை : 'உடற்பயிற்சி கூடங்களில் உடற்தகுதிக்கேற்ப பயிற்சி அளிக்கும் வகையில் பிசியோதெரபிஸ்ட் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை எழுந்துள்ளது.



கர்நாடகா நடிகர் புனித்ராஜ்குமார் உடற்பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். கடுமையான உடற்பயிற்சியே இதற்கு காரணம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். 'தமிழகத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க அரசு சில உத்தரவுகளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும்' என்கிறார் தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தலைவர் கிருஷ்ணகுமார்.மதுரையில் அவர் கூறியதாவது: உடற்பயிற்சி நிலையங்களை தொடங்கவும் நிர்வகிக்கவும் நடைமுறை சட்ட திட்டங்களை உருவாக்க வேண்டும். முக்கியமாக உடற்பயிற்சி கூடம் நடத்த பிசியோதெரபிஸ்ட் ஒருவர் அவசியம் என்ற நடைமுறையை உருவாக்க வேண்டும்.



பிசியோதெரபிஸ்ட்டால் ஒருவரது உடல் திறனை மதிப்பீடு செய்து அவருக்கு எத்தகைய உடற்பயிற்சிகளை பரிந்துரை செய்யலாம் என்பதை முடிவு செய்ய முடியும்.டாக்டரிடமிருந்து உடல் தகுதி சான்றிதழ் பெற்ற பிறகே உடற்பயிற்சி கூடத்திற்குள் அனுமதிக்க வேண்டும். வாரத்திற்கு எவ்வளவு மணி நேரம் உடற்பயிற்சி செய்யலாம் எவ்வளவு எடையுள்ள உபகரணங்களை உபயோகிக்கலாம் வாரத்தில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் தகுந்தபடி எவ்வளவு நேரம் ஓய்வு எடுப்பது போன்ற கட்டுப்பாடுகளை வரையறுக்க முடியும்.ஆறு மாதத்திற்கு ஒரு முறை வாடிக்கையாளர்களுடைய ரத்தத்தில் சர்க்கரை கொழுப்பு அளவு மற்றும் சில குறியீடுகளை பரிசோதித்து பதிவேட்டில் குறித்துக்கொண்டு அதன் சாதக பாதக முடிவுகளுக்கேற்ப உடற்பயிற்சிகளை மாற்றியமைக்க முடியும். டாக்டரை அணுகி ஆலோசனை பெறுங்கள் எனகூற முடியும். இதன்மூலம் உயிரிழப்பை தடுக்க முடியும். எனவே உடற்பயிற்சி கூடங்களில் கட்டாயம் பிசியோதெரபிஸ்ட் பணியமர்த்தப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X