மதுரை : மதுரை காமராஜ் பல்கலை ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு நவ., மாத சம்பளம் வழங்காததை கண்டித்து பல்கலை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் முருகன், செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் செல்வம், ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ஜெபர்லால், சீனிவாசன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.தலைவர் முருகன் கூறுகையில், ''பல்கலை ஆசிரியப் பணி, ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் 600 பேரும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் 1300 பேரும் நவ., சம்பளம் வழங்காததால் பாதிக்கப்பட்டுள்ளோம். சம்பளம், ஓய்வூதியம் வழங்ககோரி பல்கலை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கிறோம்'' என்றார்.