விரால் மீன் வளர்க்க ஆசையா; 40 சதவீத மானியம் தயார் | மதுரை செய்திகள் | Dinamalar
விரால் மீன் வளர்க்க ஆசையா; 40 சதவீத மானியம் தயார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2021
00:41


மதுரை : மீன் வளத்துறையின் கீழ் பண்ணைகுட்டையில் மீன்களுடன் நன்னீர் இறால் வளர்ப்பு, பாலிதீன் சீட்களில் மீன்வளர்ப்பு மற்றும் விரால் மீன் வளர்ப்புக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 1000 சதுர மீட்டர் பரப்பில் கெண்டை மீன்களுடன் நவீன இறால் வளர்ப்பை ஊக்குவித்தல் திட்டத்திற்கான மதிப்பீடு ரூ.62 ஆயிரத்து 500. இதில் 40 சதவீதமாக ரூ.25ஆயிரம் மானியம் வழங்கப்படும். பண்ணை குட்டையில் பாலிதீன் சீட் மூலம் மீன்வளர்த்தல் திட்டத்தின் கீழ் குட்டையை புனரமைக்க ஆகும் ரூ.ஒரு லட்சத்து 87ஆயிரத்து 500 தொகையில் ரூ.75ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

விரால் மீன்வளர்ப்பு திட்டத்தின் கீழ் ஆகும் ரூ.75ஆயிரம் செலவில் ரூ.30ஆயிரம் மானியம்.பயன்பெற விரும்புபவர்கள் ஆதார், ரேஷன் கார்டு, பட்டா, சிட்டா அடங்கல், நிலத்தின் வரைபடத்துடன் 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மீன்வளத்துறை, பாண்டியன் டவர்ஸ், மேலப்பொன்னகரம் 5வது தெரு, ஆரப்பாளையம். தொடர்புக்கு : 0452 - 234 7200.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X