மதுரை : மதுரையில் 1750 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 2 பேரை வேனுடன் போலீசார் கைது செய்தனர்.காளவாசல் சம்பட்டிபுரம் அருகே உணவு கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்
. சரக்கு வேனை சோதனையிட்ட போது அதில் 50 பிளாஸ்டிக் பைகளில் 1750 ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. காளவாசல், கோச்சடை பகுதி ரேஷன்கடைகளில் இந்த அரிசியை பெற்று கால்நடைகள் மற்றும் ஓட்டல்களுக்கு சப்ளை செய்ய கொண்டு செல்வதும் தெரிய வந்தது. வேனிலிருந்த ராஜ்குமார் 40, மணிகண்டனை 22, போலீசார் கைது செய்து, வேனையும் பறிமுதல் செய்தனர். மதுரையில் தொடர்ந்து ரேஷன்அரிசி கடத்த முயற்சிப்பது தொடர்கிறது.