மதுரை ஜான்சிராணி பூங்கா கடை ஏலம் மேல்நடவடிக்கை நிறுத்திவைப்பு; உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
01:13


மதுரை : மதுரை ஜான்சிராணி பூங்கா பாரம்பரிய பஜார் கடைகள் ஒதுக்கீடு ஏலத்தின் மீதான மேல்நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.



பா.ஜ., தலைவர் சரவணன் தாக்கல் செய்த பொதுநல மனு: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம், வைகை ஆறு புனரமைப்பு, பல்லடுக்கு வாகன நிறுத்தம் உட்பட பல்வேறு மேம்பாட்டு பணி ரூ.1000 கோடியில் நடக்கிறது.பாரம்பரிய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஜான்சிராணி பூங்காவில் பாரம்பரிய பஜார், சித்திரை வீதிகள், குன்னத்துார் சத்திரம் கட்டுமானம், விளக்குத்துாண், பத்துத்துாண், திருமலை நாயக்கர் மகால் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.




சுற்றுலா பயணிகளை கவர ஜான்சிராணி பூங்காவில் ரூ.2 கோடியே 45 லட்சத்தில் பாரம்பரிய பஜாரில் (ஹெரிடேஜ் பஜார்) 12 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் பழமையான பாரம்பரிய பொருட்களை விற்பனை செய்யும் நோக்கத்திற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியது. மாநகராட்சி கமிஷனர் பல்லடுக்கு வாகன காப்பகம், ஜான்சிராணி பூங்கா பாரம்பரிய பஜார் கடைகளுக்கு டெண்டர் மற்றும் ஏல அறிவிப்பு வெளியிட்டார். பாரம்பரிய பஜாரில் பழமையான பொருட்கள் விற்பனைக்கு 2 கடைகள் மட்டுமே ஒதுக்கீடு செய்து அறிவிப்பில் உள்ளது.



வங்கி மற்றும் இதர வணிகத்திற்கு கடைகளை ஒதுக்கீடு செய்வது திட்டத்தின் நோக்கத்திற்கு எதிரானது. அறிவிப்பில் விதி மீறல் உள்ளது.ஜான்சிராணி பூங்கா பாரம்பரிய பஜார் கடைகளுக்கான ஏலத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். புது அறிவிப்பு வெளியிட்டு பாரம்பரிய பொருட்கள் விற்க 12 கடைகளுக்கு வெளிப்படையாக ஏலம் நடத்த வேண்டும்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பாரம்பரிய பொருட்கள் விற்பதை தவிர வேறு வணிக நடவடிக்கைக்கு அனுமதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு சரவணன் குறிப்பிட்டார்.



நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு விசாரித்தது.மாநகராட்சி தரப்பு: ஏலம் முடிந்துவிட்டது. பூங்கா பஜாரில் பாரம்பரிய பொருட்களைத்தான் விற்பனை செய்ய வேண்டும் என திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் எதுவும் குறிப்பிடவில்லை. மனுதாரர் எவ்வித ஆய்வும் செய்யாமல், கற்பனை அடிப்படையில் மனு செய்துள்ளார் என தெரிவித்தது.



நீதிபதிகள்: மதுரை புராதன நகர். இப்பஜாரில் மதுரையின் பாரம்பரிய பொருட்களை விற்பனை செய்ய கடைகள் ஒதுக்கீடு செய்ய பரிசீலித்தால் என்ன என்றனர். ஏலத்தை பொறுத்தவரை அதன் மீதான மேல்நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும். கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி டிச.,15க்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X