திருப்பூர்;திருப்பூரில், டிரீம்-20 பசுமை அமைப்பின், 7ம் ஆண்டு துவக்கவிழாவில், முன் களப்பணியாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.டிரீம்-20 பசுமை அமைப்பின், 7ம் ஆண்டு துவக்க விழா மற்றும் நன்றி நவிழல் நிகழ்ச்சி திருப்பூர், வாலிபாளையம் சேம்பர் ஹாலில் நடந்தது. வெற்றி அமைப்பு தலைவர் சிவராம் தலைமை வகித்தார். திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார், மாவட்ட போலீஸ் எஸ்.பி., செஷாங் சாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கொரோனா காலத்தில் முன்களப்பணியாற்றிய சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டவர்களை பாராட்டி கமிஷனர் சான்றிதழ் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை, டிரீம்-20 நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.