திருப்பூர்:திருப்பூர், மாநகராட்சியின், 11வது வார்டு, பா.ஜ., வேலம்பாளையம் மண்டல தலைவர் பாலசுப்பிரமணியம் கலெக்டரிடம் கொடுத்த மனு:திருப்பூர் மாநகராட்சியின், 11வது வார்டுக்கு உட்பட்ட சிவசக்திநகர் முதல், பூலுவபட்டி வரையிலான ரோடு, மிகவும் பழுதாகியுள்ளது.குண்டும், குழியுமாக மாறியுள்ள அந்த ரோட்டை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குழாய் பதிக்க தோண்டிய குழிகள் சரியாக மூடப்படாததால், மழைநீர் தேங்கி, சேறும், சகதியுமாக மாறியுள்ளது.மாநகராட்சி பணிக்காக குழி தோண்டியதில், வீட்டு இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இதனால், செலவழித்து, சரிசெய்ய வேண்டியுள்ளது.ரோடு மோசமாக இருப்பதால், பஸ்கள் வருவதில்லை. போக்குவரத்து வசதியை உருவாக்கி கொடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளார்.