சிவகங்கை, மானாமதுரை நகராட்சிக்கு பெண் தலைவர்; சுழற்சி முறையில் கிடைக்க வாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
02:11


சிவகங்கை : மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை ஆகிய இரு நகராட்சி தேர்தலில் சுழற்சி முறையில் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.



நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மாநில அளவில் உள்ள 142 நகராட்சிகளில் தலைவர் பதவி 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும். ஒவ்வொரு 10ஆண்டிற்கு ஒரு முறை சுழற்சி முறையில் நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படும். அந்த வகையில் காரைக்குடி, தேவகோட்டை நகராட்சி தலைவர் பதவியை பெண் தலைவர்களுக்கு பின் ஒரு முறை (5 ஆண்டு) ஆண்களே தலைவராக பதவி வகித்துள்ளனர்.



அந்த அடிப்படையில் இவ்விரு நகராட்சி தலைவர் பதவிக்கும் ஆண் (பொதுப்பிரிவு)களுக்கே மீண்டும் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது.ஆனால் சிவகங்கை நகராட்சி 2001 ம் ஆண்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சாந்தி மனோகரன் தலைவராக தேர்வாகினார். அவருக்கு பின் நடந்த இரண்டு நகராட்சி தேர்தலில் தலைவராக முருகன், அவரது இறப்பிற்கு பின் நாகராஜன் ஆகியோர் தலைவராக இருந்தனர்.


கடைசியாக தலைவர் அர்ச்சுணன் பணிபுரிந்தார். 10 ஆண்டு சுழற்சிப்படி சிவகங்கை நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படலாம். மானாமதுரை பேரூராட்சியாக இருந்த போது கடந்த 2 தேர்தலிலும் ஆண்களே தலைவராக இருந்தனர். இதனால் நகராட்சி தேர்தல் விதிப்படி தரம் உயர்த்தப்பட்ட மானாமதுரை நகராட்சி தேர்தலிலும் தலைவர் பதவி பெண்களுக்கே ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.



சிவகங்கை, மானாமதுரைக்கு பெண் தலைவர்: நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் மாநில அளவில் உள்ள 142 நகராட்சிகளில் பெண் வாக்காளர் சதவீதத்தை கணக்கிட்டு 50 சதவீத நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படும். அதேபோன்று 10 ஆண்டிற்கு ஒரு முறை தலைவர் பதவிக்கான பாலினத்தை மாற்றி அமைக்க வேண்டும்.சிவகங்கை, மானாமதுரை தலைவர் பதவி பெண்களுக்கும், காரைக்குடி, தேவகோட்டை நகராட்சி தலைவர் பதவி ஆண்களுக்கே ஒதுக்கப்படலாம் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X