விபத்து அபாயம்திருப்பூர், ஒற்றைக்கண் பாலம் அருகே கொங்கு மெயின் ரோட்டில் பயன்படுத்தப்படாமல் உள்ள கிணற்றில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், கிணறு நிரம்பி வருகிறது. இதன் காரணமாக, கிணற்றையொட்டி உள்ள கட்டடங்களுக்கு நீர் சென்று வருகிறது. தொடர்ந்து சுவர் ஈரப்பதத்துடன் இருப்பதால், விபத்து அபாயம் உள்ளது.- தினேஷ்குமார்,கொங்கு மெயின் ரோடு.தெருவிளக்கு எரியவில்லைதிருப்பூர் - காங்கயம் ரோடு, அமர்ஜோதி கார்டனில் தெருவிளக்கு எரியவில்லை. அதிகாலை, இரவு நேரத்தில் மக்கள் நடமாட சிரமப்பட்டு வருகின்றனர்.- பழனிசாமி, அமர்ஜோதி கார்டன்குண்டும், குழியுமான ரோடுதிருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, குளத்துப்பாளையத்துக்கு செல்லும் பகுதியில் ரோடு குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக, பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.- ராஜா, குளத்துப்பாளையம்.திருப்பூர் - காங்கயம் ரோடு, கான்வன்ட் கார்டன் பகுதியில் ரோடு படுமோசமாக உள்ளது. பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.- கோபால், கான்வன்ட் கார்டன்.குடிநீர் பற்றாக்குறைதிருப்பூர், புதுார் பிரிவு, 2வது வீதியில் குடிநீர் ஒரு மணிநேரம் தான் வருவதால், தண்ணீர் பிரச்னை இருந்து வருகிறது. நேரத்தை அதி கரித்து தண்ணீர் வழங்க வேண்டும்.- சிவனேசன், புதுார் பிரிவு.