தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்டது அட்டுக்கல் மலை கிராமம். சுமார், 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், குப்பை எடுப்பதற்கு, தூய்மை பணியாளர்கள் வருவதில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், சாலையோரத்தில், கொட்டப்பட்டிருந்த குப்பை, தற்போது, சாலை முழுவதும் பரவிக்கிடக்கிறது. மழை பெய்து வருவதால், குப்பை கொட்டப்பட்ட இடத்தில், கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது.இதனால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அட்டுக்கல் பகுதியில், குப்பை கொட்டுவதற்காக, தொட்டி வைக்க வேண்டும். நோய்த்தொற்று தடுக்க, கொசு மருந்து அடிக்க வேண்டும். வாரம் ஒரு முறையாவது, குப்பையை அகற்றி சுத்தம் செய்ய வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.