நகர வீதிகளில் மழை நீர் தேக்கம்: வல்லுனர் குழு உதவியுடன் தீர்வு காண | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
நகர வீதிகளில் மழை நீர் தேக்கம்: வல்லுனர் குழு உதவியுடன் தீர்வு காண
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2021
02:31

கோவை:மாநகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்குவதை முற்றிலும் தவிர்த்து, நிரந்தர தீர்வு காண்பது தொடர்பான, முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் தலைமையில் நேற்று நடந்தது.மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, சூயஸ் திட்ட இயக்குனர் அமிர்த் நியோகி, மாநகராட்சி பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், ஓய்வுபெற்ற பொறியியல் பேராசிரியர் உள்ளிட்டோர் ஆலோசனைகள் வழங்கினர்.அப்போது, கமிஷனர் ராஜகோபால் பேசியதாவது:அவிநாசி ரோடு மேம்பாலம், காளீஸ்வரா மில் சாலை, லங்கா கார்னர், கிக்கானி ரயில்வே பாலம் என மாநகராட்சியின் பல்வேறு இடங்களில், மழைநீர் தேங்குவதை முற்றிலும் தவிர்த்து நிரந்தர தீர்வுகாண, பருவமழைகள் துவங்கும் முன் மழைநீர் வடிகால்களை துார்வார வேண்டும்.அத்தியாவசிய பணிகள் குறித்து விரிவான திட்டமிடல் அவசியம். மழைநீர் தேங்கும் இடங்களில் கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். அதிவேக மோட்டார்கள் பொருத்தி மழைநீரை வெளியேற்றுவதுடன், வேறு இடங்களுக்கு நீரை திருப்பிவிடும் சாத்தியக்கூறுகள் குறித்து கண்டறிதல் வேண்டும்.மாநகராட்சி பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், தலைசிறந்த கல்லுாரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கொண்ட, வல்லுனர் குழு அமைத்து உரிய திட்டமிடலுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.இக்குழுவில் இடம்பெறும் நபர்கள், தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஒரு வாரத்தில் மீண்டும் ஆலோசிக்கப்படும். இது தொடர்பாக, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, இக்குழுவிற்கு ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X