டாக்டர் கந்தசாமி நகர் சாலைகளுக்கு தேவை 'சிகிச்சை!'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
02:35

சேறும் சகதியுமாக கிடப்பதால் பாதசாரிகளுக்கு இம்சை

மழைநீர் வடிகால் வசதி இல்லைபொன்னையராஜபுரம், கிருஷ்ணா நகர், ஸ்ரீநகர் பகுதியில், மழைநீர் வடிகால் வசதி இல்லாததால், மழை நேரங்களில், தண்ணீர் சாலையில் தேங்குகிறது. நடந்து செல்லக்கூட வழியின்றி, குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகின்றனர்.- பிரீத்தி, ஸ்ரீநகர்.

திருமகள் நகரில் விளக்குகள் எரிவதில்லைமாநகராட்சி, 56வது வார்டுக்கு உட்பட்ட, பீளமேடு புதுார், திருமகள் நகரில் உள்ள வீதிகளில், 8 விளக்குகள் எரிவதில்லை. பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.- யுவராஜ், திருமகள் நகர்.

தார் சாலை அமைக்கணும்தீத்திபாளையம், டாக்டர் கந்தசாமி நகரில் தார் சாலை வசதியில்லாததால், மழை நேரங்களில், இங்குள்ள மண் சாலை, சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.- சக்திவேல், தீத்திபாளையம்.

சாக்கடை கால்வாயை துார்வாரணும்மாநகராட்சி, 13வது வார்டுக்கு உட்பட்ட, தடாகம் ரோடு, வேலாண்டிபாளையம், சாஸ்திரி ரோடு, ஜானகி நகரில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இக்கால்வாயை துார்வார வேண்டும்.- ஜோசப், ஜானகி நகர்.

மின் கம்பத்தை வைக்க இடமில்லை போலும்மாநகராட்சி, 39வது வார்டுக்கு உட்பட்ட, பீளமேடு, அனந்த திருவேங்கிடசாமி வீதியில், சிதிலமடைந்த மின்கம்பத்தை அகற்றிய மின் வாரியத்தினர், அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் போட்டு சென்றுள்ளனர்; கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது; துர்நாற்றம் வீசுகிறது. இக்கம்பத்தை அகற்ற வேண்டும்.- நாராயணசாமி, அனந்த திருவேங்கிடசாமி வீதி.

சாலையை சீரமைக்கணும்மேட்டுப்பாளையம் நகராட்சி, 32வது வார்டுக்கு உட்பட்ட, மீனாட்சி மருத்துவமனை பின்புறம் உள்ள சாலை, பயன்படுத்த முடியாத அளவுக்கு, புற்கள் வளர்ந்தும் குப்பை நிறைந்தும் காணப்படுகிறது. இவற்றை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.- சுரேஷ், மேட்டுப்பாளையம்.

குண்டும் குழியுமானரோடு; மக்கள் அவதிமாநகராட்சி, 93வது வார்டுக்கு உட்பட்ட, குனியமுத்துார், இடையர்பாளையம், பெருமாள் கோனார் வீதியில், சாலையின் மத்தியில் உள்ள குழியால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இச்சாலையை சீரமைக்க வேண்டும்.- வரதராஜ், இடையர்பாளையம்.

மின் விபத்து அபாயம்மாநகராட்சி, 47வது வார்டுக்கு உட்பட்ட, கணபதி, குமரன் நகர் பூங்கா அருகில் உள்ள காய்ந்த மரத்தின் கிளைகள், அருகில் உள்ள, மின் கம்பிகளை உரசியபடி உள்ளன. இம்மரம் சாய்ந்து விழுந்து, மின் விபத்து ஏற்படும் முன், மரத்தை பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.- ராஜா, குமரன் நகர்.

குப்பை தொட்டியை மாற்றணும்ராம்நகர், ராஜாஜி ரோடு அருகே, 30 அடி நேரு ரோடு சந்திப்பில் உள்ள, குப்பை தொட்டி, சிதிலமடைந்து பயனற்றுள்ளது. இத்தொட்டியை அகற்றி விட்டு, புது தொட்டி வைக்க வேண்டும். இப்பகுதியில் துாய்மை பணியாளர்கள், குப்பையை சாலையின் நடுவில் பரப்பி மூட்டையாக கட்டுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.- ரமணி, ராம்நகர்.

பிரதான சாலையில் குழிதடாகம் ரோடு, வெங்கிட்டாபுரத்தில் இருந்து, கே.எம்.ஜி., புதுார் பிரிவு வரை, சாலை குண்டும் குழியுமாக உள்ளது. போக்குவரத்து அதிகம் நிறைந்த இச்சாலையில், நெருக்கடி ஏற்படுகிறது; சாலையை புதுப்பிக்க வேண்டும்.- தனபால், டி.வி.எஸ்.,நகர்.

சாலையில் ஓடுது கழிவுநீர்கோவை - பொள்ளாச்சி பிரதான ரோடு, மலுமிச்சம்பட்டி போக்குவரத்து சிக்னல் அருகில், சாக்கடை கழிவுநீர் சாலையில் ஓடுகிறது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- நந்தகுமார், ஒத்தக்கால்மண்டபம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X