வி.சி.க., நிர்வாகி மீது மேலும் ஒரு வழக்கு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வி.சி.க., நிர்வாகி மீது மேலும் ஒரு வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2021
02:35

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூரில், ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாக, வி.சி.க., நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தொண்டாமுத்தூர், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் ஜார்ஜ் குப்புசாமி. இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர். கடந்த, 29ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த அற்புதராஜன் என்பவருடன் ஏற்பட்ட இடத்தகராறில், அற்புதராஜனை தாக்கி, அவரது குடும்பத்தினரை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக, ஜார்ஜ் குப்புசாமி மீது அற்புதராஜன் போலீசில் புகார் அளித்தார்.தொண்டாமுத்தூர் போலீசார், ஜார்ஜ் குப்புசாமி மற்றும் அவரது மனைவி மீது, மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், அற்புதராஜனின் அண்ணன் அருள்ராஜுடன் ஏற்பட்ட தகராறில், ஜார்ஜ் குப்புசாமி, அருள்ராஜை ஆபாசமாக பேசி, கட்டையால் தாக்கி உள்ளார்.படுகாயமடைந்த அருள்ராஜ், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அருள்ராஜ் அளித்த புகாரின் பேரில், ஜார்ஜ் குப்புசாமி மீது ஆபாசமாக பேசுதல், தாக்கி காயம் ஏற்படுத்துதல் ஆகிய இரண்டு பிரிவின் கீழ், தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X