கோவை:சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அம்பேத்கர் படத்துக்கு, காங்கிரஸ் சார்பில், மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. காங்., அலுவலகத்தில் நேற்று நடந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு, மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை வகித்து, அம்பேத்கரின் சிறப்பு, பட்டியலின மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்து பேசினார். காங்., மாவட்ட தலைவர் கருப்புசாமி, எஸ்.சி., பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.