திருப்பூர்:திருப்பூர் வடக்கு தாசில்தார் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென, எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.எம்.பி., சுப்பராயன், கலெக்டருக்கு அனுப்பிய கடிதம்:திருப்பூர் வடக்கு தாலுகா, தொட்டிபாளையம் கிராமத்துக்கு உட்பட்ட வார்டு -எச், பிளாக் -220 டி.எஸ்.என்.ஓ., -15 பகுதியில், அரசு நிலத்தில், 25 குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த, 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு, காலி செய்ய வேண்டுமென, வடக்கு தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸ் அறிவிப்பை ரத்து செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளார்.