மழைக்காலத்தில் நகர ரோடுகளில்... படகு விடலாம்!அதிகாரிகள் அலட்சியத்தால் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
03:01

உடுமலை:உடுமலையில், மழை நீர் வடிகால் கட்டமைப்புகள் முறையாக பராமரிக்கப்படாமல், மழைக்காலங்களில், முக்கிய ரோடுகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்பதால், மக்கள் வேதனையில் உள்ளனர். உடுமலை நகர பகுதியில், கடந்த இரு நாட்களாக அதி கன மழை பெய்து வருகிறது. 4ம் தேதி, 37 மி.மீ., மழை பதிவானது. நேற்றுமுன்தினம், மாலை, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. நடப்பு வட கிழக்கு பருவ மழை காலத்தில், உச்ச அளவாக, 72 மி.மீ., மழை பெய்தது.வெளிச்சத்திற்கு வந்த கட்டமைப்புகள்நகரப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக, பிரதான ரோடுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழைய பஸ் ஸ்டாண்ட், பொள்ளாச்சி ரோடு பகுதிகளில், பல அடி உயரத்திற்கு மழை வெள்ளம் ஓடியதால், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதே போல், பழநி ரோடு, தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, தளி ரோடு, ராஜேந்திரா ரோடு பகுதிகளிலும், மழை நீர் வடிய வழியில்லாமல், ரோடுகளை வெள்ளம் ஆக்கிரமித்தது. வடிகால் ஆக்கிரமிப்புபிரதான ரோடுகளில், மழை நீர் வெளியேற்றும் வகையில், மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, அவை கடைகள், கட்டட உரிமையாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, மாயமாகியுள்ளது.பிரதான ரோடுகளின் மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி முழுமையாக அகற்ற வேண்டும், என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. அதே போல், பழநி ரோடு, கச்சேரி வீதி, தளி ரோடு, நாராயணன் காலனி பகுதிகளில், நுாற்றாண்டு சிறப்பு நிதியின் கீழ், புதிதாக மழை நீர் வடிகால் கட்டப்பட்டு வருகின்றன. முறையான திட்டமிடல் இல்லாமல், ரோடு மட்டத்திலிருந்து, பல அடி உயரத்திற்கு, தடுப்பணையாக கட்டப்படுகிறது.இதனால், பெய்யும் மழை நீர் முழுவதும் ரோட்டில் ஓடி வருகிறது. முறையான திட்டமிடல், வடிவமைப்பு இல்லாததால், நாராயணன் காலனி பகுதியிலுள்ள நுாற்றுக்கணக்கான வீடுகளுக்குள், மழை வெள்ளம் புகுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது.தாராபுரம் ரோட்டில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், இரண்டு கி.மீ., துாரத்திற்கு ரோடு அகலப்படுத்தப்பட்டு, மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. தற்போது பெய்த மழையின் போது, வெள்ளம் வடிய வழியில்லாமல், பல அடி உயரத்திற்கு ரோட்டில் ஓடியது.நகரில், மழை நீர் வெளியேற்றும் வகையில், இயற்கையாக அமைந்துள்ள தங்கம்மாள் ஓடை, நாராயணன் காலனி ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம் ஓடை, நெடுஞ்செழியன் காலனி ஓடை உள்ளிட்ட நீர் வழித்தடங்கள், முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகள் அகற்றாமல், பெயரளவிற்கு துார்வாரப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, அனைத்து ரோடுகளிலும் பல அடி உயரத்திற்கு மழை வெள்ளம் ஓடியதால், வாகன போக்குவரத்து ஸ்தம்பித்ததோடு, இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள், வெள்ளத்தில் சிக்கினர்.3 மணி நேரத்திற்கு பின், ஓரளவு நீர் வடிந்த பிறகே, போக்குவரத்து துவங்கியது. இருப்பினும், பிரதான ரோடுகளில் பல இடங்களில், மழை நீர் தேங்கி, சேறும், சகதியுமாக மாறியுள்ளது. தாலுகா அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், கிளைச்சிறை என அரசு அலுவலகங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். திட்டமிடல் தேவைஒவ்வொரு ஆண்டும் தொடரும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். நகரின் பிரதான ரோடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை நீர் வடிகால்களை மீட்டு, புதுப்பிக்க வேண்டும். அவ்வப்போது அவற்றை துார்வார வேண்டும்.இணைப்பு ரோடுகளில் உள்ள வெள்ள நீர் வடிகால்களை, பிரதான வடிகால்கள் மற்றும் ஓடைகளில் இணைக்க வேண்டும். மழை நீர் தேங்கும் பகுதிகளை ஆய்வு செய்து, நிரந்தர தீர்வு காண வேண்டும்.இயற்கையாக அமைந்துள்ள ஓடைகளின் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, கான்கிரீட் அமைக்கவும், 'பேபி கனல்' வழியாக கழிவு நீரும், மழை காலத்தில் வெள்ள நீரும் செல்லும் வகையில் திட்டமிட வேண்டும். மழை நீர் வடிகால் என்ற பெயரில், ரோடுகளின் ஓரத்தில் மழை நீர் செல்ல வழியில்லாமல், அமைக்கப்படும் கட்டுமானத்தை மாற்றி அமைத்து, உரிய பயன் அளிக்கும் வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X