அமராவதியிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: கிராம மக்களுக்கு எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
03:02

உடுமலை:உடுமலை அமராவதி அணையிலிருந்து ஒரு மாதமாக உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில்,நேற்று மதியம் திடீரென அதிகரிக்கப்பட்டது.உடுமலை அருகேயுள்ள, அமராவதி அணை, ஜூன் முதல் மே வரையிலான நடப்பு நீர் ஆண்டில், தென்மேற்கு பருவமழையால், ஜூலை 23ல் நிரம்பி, தொடர்ந்து மூன்று மாதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.அணையிலிருந்து, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டிலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், வட கிழக்கு பருவ மழை துவங்கி, அணை நீர்ப்பிடிப்புகளில் பெய்த கன மழையால், கடந்த, நவ., 3ம் தேதி, அணை நிரம்பியது. கடந்த ஒரு மாதமாக அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.நேற்று காலை நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு, 1,405 கன அடியாகவும், உபரிநீர் வெளியேற்றம், 1,042 கன அடியாகவும் இருந்தது.நேற்றுமுன்தினம் இரவு மற்றும் நேற்று காலை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான, மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, மறையூர், காந்தலுார், கொடைக்கானல் மேற்கு பகுதி, மற்றும் வால்பாறை கிழக்கு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, பாம்பாறு, தேனாறு மற்றும் சின்னாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைக்கு நீர் வரத்து திடீரென அதிகரித்தது.இதனையடுத்து, ஆற்றின் வழியோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. நேற்று மதியம், 12:00 மணி நிலவரப்படி, அணை நீர் மட்டம், மொத்தமுள்ள, 90 அடியில், 87.60 அடியாகவும், நீர்இருப்பு, 3,830 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு, 3,100 கன அடியாக இருந்தது. அணைக்கு வரும் உபரி நீர், ஆற்று மதகு வழியாக, 3 ஆயிரம் கன அடியும், பிரதான கால்வாயில், 100 கன அடியும் திறக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X