வணிக நிறுவனங்கள், வங்கிகள், மார்க்கெட்டில்; * தடுப்பூசி போடாதவரை அனுமதிக்கின்றனரா என சோதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
03:09


திண்டுக்கல் : தடுப்பூசி போடாதவர்களை பொது இடங்களில் அனுமதிக்கின்றனரா என்பதை கண்டறிய திண்டுக்கல் முழுவதும் வணிக நிறுவனங்கள், வங்கிகள், சினிமா தியேட்டர்களில் சுகாதாரத்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.



உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் 'ஒமைக்ரான்' கொரோனா வைரஸ் இந்தியாவில் சில மாநிலங்களில் கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அந்த வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி திண்டுக்கல்லில் ரேஷன் கடைகள், வணிக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், தியேட்டர், திருமண மண்டபம், தங்கும் விடுதிகள், வங்கிகள், டீ கடைகள், கல்வி நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகிய இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



இதையும்மீறி, அந்நிறுவனங்கள் பொதுமக்களை அனுமதிக்கின்றனவா என்பதை கண்டறிய, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தலைமையில் சுகாதார ஆய்வாளர், உதவியாளர் அடங்கிய குழுக்கள் ஊராட்சி வாரியாக அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வணிக நிறுவனம், தொழிற்சாலை, வங்கிகளுக்கு வருவோரிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டது



குறித்து ஆய்வு செய்கின்றனர்.மேலும் ஊழியர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனரா, இல்லையெனில் விதியை மீறி அனைவரையும் கடைகளுக்குள் அனுமதித்து தொற்று பரவலுக்கு காரணமாக இருக்கின்றனரா என சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் தடுப்பூசி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X