ரோடு, பாலம், அடிப்படை வசதி இன்றி சிரமம் சாக்கடை சுத்தம் செய்யாததால் சுகாதாரக்கேடு அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சி அவலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
05:00


தேவதானப்பட்டி : அழகர் நாயக்கன்பட்டியில் ரோடு, பாலம்,மழைநீர் வடிகால்,சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.பெரியகுளம் ஒன்றியம் அழகர்நாயகன் பட்டி ஊராட்சியில் 6 வார்டுகளில், இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.



நடுத்தெரு, ராமர் கோவில் தெரு,சாவடி தெரு, மாரியம்மன் கோவில் வடக்கு தெரு,விஸ்தரிப்பு தெரு உட்பட எட்டு தெருக்கள் உள்ளது. வைகை அணை கூட்டு குடிநீர் திட்டம், நெடுங்குளம்,பட்டாளம்மன் கோவில் பகுதியில் போர்வெல்கள் மூலம் மேல் நிலை தொட்டிகள் மூலம் தினமும் 60 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. இங்கு அடிப்படை வசதிகள் இன்றி புறக்கணிக்கப்பட்ட ஊராட்சி போல் உள்ளது.அழகர்நாயக்கன்பட்டி விஸ்தரிப்பு பகுதியிலிருந்து, மெயின் ரோடு வரை 20 அடி பாலம் கட்டுமான பணிக்கு டெண்டர் விட்டு பல மாதங்கள் ஆகியும் வேலை துவங்காமல் உள்ளது.



இதனால் அந்தப் பகுதியை கடந்து செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். ரோடு மற்றும் சிமெண்ட் ரோடு வசதி, மழைநீர் வடிகால்இல்லை. கிராமத்தில் சுகாதார கேடு நிலவுகிறது.பொதுமக்கள் கருத்து: பஸ் வசதி தேவைபி.சுரேஷ் கண்ணன்: வத்தலகுண்டு, பெரியகுளம் டிப்போ அரசு டவுன்பஸ்கள் ஒரு நாளைக்கு 6 டிரிப் வந்து சென்றது. தற்போது வரும் பஸ்கள் இதே வழியாக மீண்டும் செல்வதில்லை. வேல்நகர் வழியாக சென்றுவிடுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். டவுன்பஸ்கள் இதே வழியாக சென்று திரும்ப கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பஸ்கள் வந்த வழியாக திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். சுடுகாட்டில் ஈமச்சடங்கு செய்வதற்கு உரிய வசதிகள் இல்லை.பாலம் பணி துவக்க வேண்டும்ஆர்.செல்வராணி: விஸ்தரிப்பு பகுதியில் பாலம் இல்லாததால் மழைக்காலங்களில் சிரமமாக உள்ளது.ரூ.7 லட்சம் மதிப்பில் பாலம் கட்ட டெண்டர் விட்டு பணி துவங்க வில்லை. கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பாலம் கட்டுவதற்கு நடவடிக்கைஎடுக்க வேண்டும்.மகளிர் சுய உதவி குழு அலுவலகம் அருகே வடிகால் வசதிஇல்லாததால் மழைநீர் தேங்கிஉள்ளது.புதர்மண்டிய ரோடுஎம்.கணேசமூர்த்தி:ஊராட்சியில் ஊரின் பெயர் பலகை இல்லை. அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி யூனியன் ரோட்டை



நெடுஞ்சாலைத்துறையில் இணைக்க வேண்டும். இதனால் ரோடு பணி தரமாக நடக்கும். தற்போது ரோட்டில் இரு புறங்களிலும் புதர்மண்டியுள்ளது. மழைநீர் வடிகால், சாக்கடை வசதி இல்லாததால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.ஆழ்துளை குழாய் வசதிடி.கோட்டை அம்மாள், ஊராட்சி தலைவர்: சாத்தையா கோவில் அருகே ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் வடிகால் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் காலனியில் ரூ 2.25 லட்சம் மதிப்பீட்டில் போர் அமைத்து தொட்டி வைக்கப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி ஊராட்சி ஒன்றியநிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது என்றார்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X