சேதத்தில் ஊராட்சி கட்டடம்; பராமரிப்பில்லா வடிகால்கள்; அடிப்படை வசதிக்காக ஏங்கும் மேட்டமலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
05:06


சாத்துார் : சேதத்தில் ஊராட்சி அலுவலக கட்டடம்,பராமரிப்பில்லா வடிகால்கள் என மேட்டமலை ஊராட்சி மக்கள் அடிப்படை வசதிக்காக ஏங்கும் நிலையில் உள்ளனர்.



வீரபாண்டியபுரம், முனியசாமி காலனி ,ஆர்கே புது வசந்தம் நகரை உள்ளடக்கிய மேட்டமலை ஊராட்சியில் தீப்பெட்டி பட்டாசு ஆலை தொழிலாளர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். மேட்டமலையில் தெருக்களில் சிமென்ட் ரோடு போடப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் ரோடு சேதமடைந்த நிலையில் உள்ளது. மழைநீர் வடிகால்கள், சாக்கடைகள் கற்கள் பெயர்ந்து பராமரிப்பு இன்றி காணப்படுகின்றன மேட்டமலை கண்மாய் ரும் நீர்வரத்து ஓடைகளில் குப்பை கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசு அடையும் அபாயம் உள்ளது. இப்பகுதிகளில் வளர்க்கப்படும் பன்றிகளால் தொற்றுநோய் அபாயமும் உள்ளது. நீர்வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன.மழைக் காலத்திற்கு முன்பாக ஊராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் தற்போது மேட்டமலை கண்மாயில் 90 சதவீதம் தண்ணீர் சேகரிக்கப்பட்டுள்ளது .எஞ்சிய ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் மூலம் இப்பகுதி



கண்மாய் முழுமையாக நிரம்பும். அதோடு இப்பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வாக அமையும். வீரபாண்டியபுரம் ஆர்கே புதுவசந்தம் நகரில் ரோடு வசதி இன்றி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். முனியசாமி காலனி பகுதியிலும் ரோடு குடிநீர் குழாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. ஊராட்சி அலுவலக கட்டடம், கிராம நிர்வாக அலுவலக கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. வீரபாண்டியபுரம் மேட்டமலை சுடுகாடு சாலை இன்றி இறந்தவர்கள் உடலை உறவினர்கள் கொண்டு செல்ல சிரமம் அடைகின்றனர்.மழைநீர் புகுவதால் அவதிகாளிராஜ், குடும்பத் தலைவர்: மேட்டமலை வடக்குதெருவில் சிமென்ட் ரோடு அமைத்து 20 ஆண்டுகள் ஆகிறது .இங்குள்ள ஓடையைதுார்வார வில்லை. சிறிய மழை பெய்தாலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. விஷப்பூச்சிகளும் படையெடுக்கின்றன. மெயின் ரோட்டில் உள்ள ஓடைகளை துார்வாரியதோடு சரி. சிறிய ஓடைகளை தூர்வார வில்லை. மழைக்காலத்திற்கு முன்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரோடு. மழை நீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுகாதார வளாகம் தேவைசித்தநாதன், டிரைவர்: ஆண்களும் பெண்களும் மேட்டமலை கண்மாய் பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.




தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக கண்மாயில் தண்ணீர் நிரம்பி விட்டது. தற்போது இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று இயற்கையை உபாதையைகழித்து வருகின்றனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் புதிய சுகாதார வளாகங்களை கட்டித்தர ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருக்கள் எல்லாம் சேதமடைந்து உள்ளது.தார் ரோடு போட வேண்டும்.கொரோனாவால் பணிகள் பாதிப்புராஜசேகரன், ஊராட்சி துணைத் தலைவர்: 2 ஆண்டுகளாக கொரோனாவால் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டது. நிதி முழுவதும் சுகாதார பணிகளுக்காக செலவிடப்பட்டது. தற்போது தான் சகஜ நிலை திரும்பி வந்துள்ளது. மேட்டமலை நடுத்தெருவில் மழைநீர் வடிகால் உடன் பேவர் பிளாக் அமைக்க நிதி ஒதுக்கி தருமாறு மாணிக்கம் தாகூர் எம்.பி.,யிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவரும் செய்து தருவதாக கூறியுள்ளார்.



மழை நீர் ஓடையில் இருந்த ஆக்கிரமிப்புகளை ஓரளவுக்கு அகற்றியதால் தற்போது மேட்டமலை கண்மாய் நிரம்பி உள்ளது. ஊராட்சி கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீரபாண்டிய புரத்தில் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளதுபார்த்தசாரதி, ஊராட்சி தலைவர், மேட்டமலை: தெற்கு தெருவில் சாத்தூர் ஒன்றியதலைவர் நிர்மலா கடற்கரை நிதியிலிருந்து சுகாதார வளாகம் கட்டி தரப்பட்டுள்ளது. மேலும் வடக்குதெரு. கிழக்கு தெரு கண்ணன் தெரு பகுதிகளில் பேவர் பிளாக் பதிப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது .மழை காரணமாக பணி துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும். தெற்கு தெருவில் மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.



வசதிகள் செய்து தரப்படும்நிர்மலா கடற்கரை ராஜ், ஒன்றியக் குழுத் தலைவர்: மேட்டமலை ஊராட்சியில் வீரபாண்டியபுரமத்தில் அனைத்து தெருக்களுக்கும் பேவர் பிளாக் ரோடு அமைத்துத் தரப்பட்டு உள்ளது .தெற்கு தெருவில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு அனைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவர் உடன் கலந்து பேசி கிராம மக்களுக்கு தேவையான ரோடு, சாக்கடை உள்ளிட்ட வசதிகள் செய்து தர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X