முடங்கியது; விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய பணிகள்...நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
05:08

விழுப்புரம் மாவட்டத்தில், கனிம வளங்களோ, தொழிற்சாலைகளோ இல்லாத நிலையில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.



70 சதவீதம் பேர் விவசாயம், கால்நடை வளர்ப்பைச் சார்ந்தே உள்ளனர்.பெரிய அளவில் வருவாய் இல்லை என்றாலும் இதிலிருந்து மீள வழியின்றி லட்சக்கணக்கான குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.இப்பகுதி விவசாயம் மழையை நம்பியே உள்ளது . இந்த மழையே கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி விட்டது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பலஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.



அப்போது பல இடங்களில் விவசாயிகள் அறுவடை செய்யாமல் பயிர்களை அப்படியே நிலத்தில் ஓட்டி அடுத்த சாகுபடியை செய்தனர்.கடந்த ஆண்டில் ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து மீள்வதற்குள், இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட பேரிடியாக கன மழை செய்தது.இதனால், சம்பா பருவத்தில் நடவு செய்யும் பொன்னி நெல்லுக்கான நாற்று விட வாய்ப்பின்றி பல இடங்களில் பயிர் செய்யாமல் விட்டு விட்டனர்.நடவு செய்த இடங்களில் விதை நெல்லும், நடவு செய்த நாற்றும் வெள்ளத்தில் அடித்துச் சென்றன. இதற்காக செலவும் வீணானது.மீண்டும் விதை விடுவதற்கு அவகாசம் கொடுக்காமல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த பருவத்தில் சாகுபடி செய்யப்படும் மானாவாரி வேர்க்கடலையும் விதைக்க முடியாமல் நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.நவம்பர் மாதத்தில் பணப்பயிர் எனப்படும் காராமணி, உளுந்து, எள், பசிப்பயிறு ஆகியவற்றை பல ஆயிரம் ஏக்கர் புஞ்சை நிலங்களில் விதைப்பார்கள்.



இந்த ஆண்டு புஞ்சை நிலங்களில் அதிகளவில் மழைநீர் தேங்கி இருப்பதால் புழுதி ஓட்டவும் முடியவில்லை. கடந்த இரண்டு வாரமாக பெய்த கனமழையால் நிலங்களில் ஊற்றெடுத்துள்ளது.இந்த நிலங்களில் ஏர் ஓட்ட முடியாமல் நிலத்தின் தன்மை மாறியுள்ளது. ஏர் ஓட்ட இறங்கிய டிராக்டர்களின் சக்கரம் சேற்றில் சிக்கி பொக்லைன் உதவியோடு டிராக்டரை மீட்டுள்ளனர். மழை நின்று 10 நாட்கள் தொடர்ந்து வெயில் காய்ந்தால் மட்டுமே மீண்டும் ஏர் ஓட்ட முடியும் என விவசாயிகள் கூறுகின்றனர்.இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் விவசாயத்தை தொடர்வதா வேண்டாமா என தெரியாமால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.விவசாயிகளுக்கு பக்க பலமாக உள்ள கால்நடைகளை கோமாரி நோய் தாக்கி 30 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரையிலான பசுமாடுகளும், காளை மாடுகளும் இறந்துள்ளன.விவசாய கூலி வேலையும் இல்லை. இதனால், 3 மாதங்களாக விவசாய குடும்பங்கள் வருவாய் இன்றி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.பயிர் செய்தால் மட்டுமே சேதமானதற்கு நிவாரணம் கிடைக்கும். பயிரே செய்யாமல் இருந்ததுடன், விதைத்த போதும், நடவு செய்த போதும் வெள்ளத்தில் அடித்து சென்றதற்கு எந்த ஆதாரமும் விவசாயிகளிடம் இல்லை.



எனவே, இவர்களுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்திலும் நஷ்டஈடு கிடைக்காது. தற்போது வருவாய் ஏதுமின்றி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதால், மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது போல் பயிர் செய்யாமல் முடங்கியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X