ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ள படுக்கை வசதி தயார்: மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
05:43

கடலுார்-'ஒமைக்ரான்' தொற்று பாதிப்பவர்களுக்கு சிகிச்சையளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுார் அரசு மருத்துவ மனையில் படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.



கொரோனா தொற்று தமிழகத்தில் கட்டுக்குள் வந்துள்ளது. தற்போது ஒமைக்ரான் தொற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.முதன் முதலில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் கண்டறியப்பட்ட 'ஒமைக்ரான்' வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா பரவலை விட 6 மடங்கு வேகமாக ஒமைக்ரான் பரவும். இதனால் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, மீண்டும் பூஸ்டர் ஊசி செலுத்தலாமா என இந்திய சுகாதாரத் துறை ஆலோசித்து வருகிறது. இந்தியாவில் இது வரை 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது. ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேர், மகாராஷ்டிரா மாநிலத்தில் 8 பேர், கர்நாடகாவில் 2 பேர், குஜராத் மற்றும் டில்லியில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது. தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யவில்லை. தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்த தயாராக இருக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அரசு அறிவுரை வழங்கியுள்ளது.



மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு பாதிப்பு உள்ளதா என, அனைத்து விமான நிலையங்களிலும் கடும் பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். கடலுார் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. ஏற்கனவே, கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 378 படுக்கை வசதிகள் உள்ளன. இதில், 350 படுக்கை வசதிகள் ஆக்சிஜன் வசதி கொண்டதாகும். கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருவதால் அங்கு காலியாக உள்ள படுக்கையில் மற்ற பிரிவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.



தற்போது, கடலுார் அரசு மருத்துவனையில் கொரோனா நோயாளிகளுக்கு அமைத்த படுக்கைகள் முழுவதையும் ஒமைக்ரான் பாதித்து வருவோருக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்திக் கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் புதுச்சேரியில் தொற்று பரவல் தடுப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வரக் கூடாது. மீறி வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.



இதனால் நெய்வேலி, மந்தாரக்குப்பம் சுற்றியுள்ள பகுதி மக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். அனைத்து பகுதிகளிலும் மக்கள் தாங்களாக சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான், தொற்று பரவலில் இருந்து தப்பிக்க தீர்வு என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X