திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில் நிதிச்செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.
மாநில துணை செயலாளர் திருச்சித்தன், தொகுதி செயலாளர் ைஹதர்அலி, ேஷக்அப்துல்காதர் மரியாதை செலுத்தினர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட புரட்சி பாரதம் கட்சி சார்பில் நகர செயலாளர் கனிபால் தலைமையில் பல இடங்களில் கொடியேற்றினர்.
மாவட்ட செயலாளர் மருதமுத்து தலைமையில் மலரஞ்சலி செலுத்தினர். மேற்கு மாவட்டம் சார்பில் நிர்வாகிகள் சுப்புக்குட்டி, காட்டுராஜா, பிச்சை முத்து உட்பட பலர் பங்கேற்றனர்.நத்தம் வி.சி.க., சார்பில் ஒன்றிய செயலாளர்கள் மயில்ராஜ், முத்துமாணிக்கம், துணைச் செயலாளர் தமிழ்முகம் மாலை அணிவித்தனர். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தொகுதி தலைவர் சுப்பிரமணி மரியாதை செலுத்தினார். ஒன்றிய செயலாளர் சந்திரன்,
இளைஞரணி தலைவர் செல்லத்துரை பங்கேற்றனர்.வேடசந்தூர்: வேடசந்துாரில் வி.சி.க.,வினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். ஹிந்து மக்கள் கட்சியினர் மாநில துணை செயலாளர் தர்மா தலைமையில் அஞ்சலி செலுத்த வந்தனர். அதற்கு வி.சி.க.,வினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின், ஹிந்து மக்கள் கட்சியினர் மாலை அணிவித்தனர்.