வழக்கில் சிக்கிய வாகனங்களால் நோய் தொற்று பரவும் அபாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
06:32

அம்பத்துார்--குடிமை பொருள் காவல் நிலையம் அருகே குவிக்கப்பட்டுள்ள, வழக்கில் சிக்கிய வாகனங்களால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சென்னை அம்பத்துார், கருக்கு, இ.பி., காலனியில், குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் நிலையம், பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதன் எதிரிலுள்ள காலி வீட்டு மனைகளில் ரேஷன் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், கலப்பட ஆயில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம், ஆட்டோ, வேன், லாரி என, நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், கடத்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட அரிசி, பருப்பு மற்றும் ஈர மாவு ஆகியவையும், நிலையத்தின் பின்புறம் குவித்து வைக்கப்படுகின்றன. இவற்றால் ஈர்க்கப்படும் பாம்பு, தேள், பூரான், வண்டு உள்ளிட்ட விஷப் பூச்சிகள், நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் நிரந்தரமாக குடியேறி உள்ளன.கோடை மற்றும் மழைக்காலத்தில் இவை வெளியேறி, அருகிலுள்ள குடியிருப்புகளில் புகுவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் மழைநீரில் தேங்கிய வாகனங்களால், கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.அதனால், அந்த நிலையத்தின் சுற்றுப்புறங்களில் வசிப்போர் டெங்கு, மர்ம காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு ஆளாகி அவதிப்படுவதும் தொடர்கிறது.இங்குள்ள வாகனங்களை அகற்ற வேண்டுமென, பல முறை கோரிக்கை வைத்தும், சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மக்கள் அதிருப்திகடத்தல் வழக்குகளில் சிக்கி, மேற்கண்ட நிலையத்தில் வைத்திருந்த ரேஷன் அரிசி, பருப்பு மூட்டைகள், மழையால் சேதமடைந்ததால், துர்நாற்றம் வீச துவங்கியது. இதையடுத்து, அங்குள்ள காவலர்கள் மூலம், அவற்றை எடுத்துச் சென்று, அருகில் உள்ள கொரட்டூர் ஏரிக்குள் வீசியதாக, மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஏற்கனவே, கொரட்டூர் ஏரி கழிவு நீரால் மாசடைந்துள்ள நிலையில், கெட்டுப்போன உணவுப்பொருட்கள் வீசப்பட்டது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X