641 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
06:37

சென்னை-ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக, தேனிக்கு 641 கிலோ கஞ்சா கடத்த முயன்ற மூவரை, போலீசார் கைது செய்தனர்.ஆந்திராவில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களில் கஞ்சா கடத்தப்படுவதாக, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆந்திரா - தமிழகம் எல்லையில் உள்ள, காரனோடை சோதனை சாவடியில், நேற்று முன்தினம் இரவு வாகன சோதனைநடத்தினர்.அப்போது, ஆந்திராவில் இருந்து அதிவேகமாக வந்த 'ஈச்சர்' வேனை மடக்கி சோதனையிட்டபோது, அதில் 296 பார்சல்களில், 641 கிலோ கஞ்சா இருந்தது.வேனை ஓட்டிச்சென்ற நபரை கைது செய்து விசாரித்தபோது, தேனிக்கு கஞ்சா கடத்தியதும், இதன் பின்னணியில் உள்ள மதுரையைச் சேர்ந்த நபர், சொந்த ஊருக்கு பஸ்சில் செல்வதாகவும், மற்றொருவர் சென்னையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.இதையடுத்து, பெரம்பலுார் சோதனைச்சாவடியில் மதுரை நபரை கைது செய்தனர். சென்னையில் இருந்தவரையும் பிடித்தனர். சர்வதேச போதை பொருள் ஆசாமிகளுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிப்பதால், இவர்களின் பெயரை வெளியிடவில்லை. கஞ்சாவுடன் வேனை பறிமுதல் செய்து, மூவரிடமும் விசாரிக்கின்றனர்.6 பேர் சிக்கினர்திரிசூலம், ரயில்வே கேட் பகுதியில், பல்லாவரம் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அடையாறைச் சேர்ந்த ரமேஷ், 36, குரோம்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார், 22, ஆகிய இருவர் கஞ்சா விற்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.அதேபோல், கோயம்பேடு, காளியம்மன் கோவில் தெருவில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரை பார்த்ததும், டூ - வீலரில் வந்த நபர் வாகனத்தை நிறுத்தி, அங்கிருந்து தப்பி சென்றார். அந்த வாகனத்தை சோதனை செய்ததில் கஞ்சா சிக்கியது. இது குறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோயம்பேடு போலீசார் விசாரித்து, வடபழநியை சேர்ந்த இளங்கோ, 29, என்பவரை கைது செய்தனர். 200 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும், மதுரவாயல், துண்டலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து, மதுரவாயல் போலீசார் சோதனை செய்தனர். இதில், அசோக், 25, ராஜ்குமார், 23, ஆகிய இருவரும் வீட்டில் தங்கியபடி, கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இருவரை கைது செய்த போலீசார், 250 கிராம் கஞ்சா, ஐந்து மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.மற்றொரு சம்பவத்தில், வியாசர்பாடி, மூர்த்திங்கர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, நாகராஜ், 45 என்பவரை, எம்.கே.பி.நகர் போலீசார் நேற்று மடக்கிப் பிடித்தனர். 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X