'வாய்ஸ் ஆர்டிஸ்ட்ஸ்' சங்கத்தில் பெண்கள் பாதுகாப்பு கமிட்டி அறிமுகம் | சென்னை செய்திகள் | Dinamalar
'வாய்ஸ் ஆர்டிஸ்ட்ஸ்' சங்கத்தில் பெண்கள் பாதுகாப்பு கமிட்டி அறிமுகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2021
06:40

சென்னை-வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை 'வாய்ஸ் ஆர்டிஸ்ட்ஸ்' சங்கத்தில், பெண்களின் பணியிட பாதுகாப்புக்காக கமிட்டி அறிமுகம் செய்யப்பட்டது.தமிழகத்தில், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை வாய்ஸ் ஆர்டிஸ்ட்ஸ் சங்கத்தின் 7ம் ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில், திருத்தப்பட்ட சங்க விதிகள் புத்தகத்தை, சங்கத்தின் நிறுவனரும், நடிகருமான எஸ்.வி.சேகர் வெளியிட, 'சவுகீத் டப்பிங் ஸ்டூடியோ' டி.கே.குமார் பெற்றுக் கொண்டார்.தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த, விஷாகா வழிகாட்டுதலின்படி பெண்களின் பணியிட பாதுகாப்புக்காக, ஐ.சி.சி., எனும் 'இன்டர்நேஷனல் கம்ப்ளய்ன்ட் கமிட்டி' அறிமுகம் செய்யப்பட்டது.கமிட்டியை நிர்வகிக்க பின்னணி பாடகி சின்மயி ஸ்ரீபாதா, டாக்டர் மகேஸ்வரி, வழக்கறிஞர் சித்ரா, மூத்த வழக்கறிஞர் மீனாட்சி முருகன், பின்னணி குரல் கலைஞர் முரளி குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.கூட்டத்தில், சங்கத் தலைவர் எஸ்.வி.சேகர் மற்றும் முரளி குமார் பேசுகையில், 'சங்கத்தில், 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைக்கும் திட்டமில்லை. தகுதி வாய்ந்த, திறமையுள்ள பின்னணிக் குரல் கலைஞர்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்டு சங்கம் செயல்படும்' என்றனர்.உறுப்பினர்களுக்கு, விபத்து காப்பீடு, இலவச மருத்துவ திட்டம், இறப்பு நிதி உள்ளிட்ட நலத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X