பட்டதாரி ஆசிரியர் சங்க தேர்தல்திருத்தணி: தமிழ்நாடு பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க திருத்தணி வட்ட கிளை கழக தேர்தல் நேற்று நடந்தது. இதில், வட்டத் தலைவராக, திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சுப்ரமணியம் தேர்வு செய்யப்பட்டார். கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப் பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் நரசிம்மன் பொருளாளராக, செயலராக சக்கரபாணி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வெங்கடய்யா உட்பட பத்து நிர்வாகி, குழு உறுப்பினர்கள் செய்வு செய்யப்பட்டனர்.343 பயனாளிகளுக்கு வீடுதிருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளில், வீடுகள் இல்லாதவர்களுக்கு, 2021 - 22ம் ஆண்டின், பிரதம மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் மொத்தம், 343 பயனாளிக்கு வீடுகள் கட்டுவதற்கு, தலா, 1.70 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதி தலைமையில் நடந்தது. கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு வரவேற்றார். இதில், திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று, 40 பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கினார்.