அரசு பள்ளியில் அமளி பெற்றோர் அதிருப்தி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
06:57

ஆர்.கே.பேட்டை--அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்டு வரும் மோதல் குறித்து பள்ளி தலைமையாசிரியை நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன் எனக்கோரி, பெற்றோர் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனுார் கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. அதே வளாகத்தில், அரசு மகளிர் உயர்நிலை பள்ளியும் செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளிகளில், வங்கனுார் மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.இந்நிலையில், மாணவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் மாணவர்களுக்குள் ஏஎற்பட்ட மோதல் தொடர்பாக, வீடு புகுந்து தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது.அரசு பள்ளியில் மாணவர்களுக்குள் ஏற்படும் மோதல் குறித்து பள்ளி தலைமையாசிரியை நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன் எனக்கோரி நேற்று திரளான பெற்றோர், பள்ளியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.முதலில், பள்ளி எதிரே சாலை மறியல் போராட்டமும். அதை தொடர்ந்து பள்ளி வளாகத்திலும், பின் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்ட அரங்கிலும் வாக்குவாதம் நடந்தது.மேலும், அதே வளாகத்தில் செயல்படும் மகளிர் உயர்நிலை பள்ளியை, தனி வளாகத்தில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.காலை, 10:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், ஆர்.கே.பேட்டை போலீசாரின் சமரசத்தையடுத்து கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X