திருவாலங்காடு கோவில் குளத்தில் கழிவு நீர் கலப்பால் மீன்கள் இறப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
07:01

திருவாலங்காடு--திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் குளத்தில், கழிவு நீர் கலந்ததால், மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் குளத்தில் துர்நாற்றம் வீசுவதால், பக்தர்கள் நீராட முடியாமல் வருத்தத்துடன் திரும்பி செல்கின்றனர்.பருவ மழை மற்றும் நட்டேரி நீர்வரத்து காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் குளம் நிரம்பியது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் குளத்தில் நீராடி மகிழ்ந்தனர்.இந்நிலையில், கோவில் குளத்தில், 5,000க்கும் மேற்பட்ட மீன்கள் திடீரென செத்து மிதக்கின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், குளத்தின் நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏரி கால்வாய் வழியாக குளத்தில் கழிவு நீர் கலப்பதே மீன்கள் இறப்புக்கு காரணம் என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வடாரண்யேஸ்வரர் கோவிலில் விரைவில் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளதால், திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில் அதிகாரிகள், கோவில் திருக்குளத்தை துாய்மை செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்திஉள்ளனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X