திணறல்! அரவை இலக்கை எட்ட முடியாமல் கரும்பு ஆலை திணறல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
07:04

திருவாலங்காடு--திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 14 ஆண்டுகளாக நிர்ணயித்த கரும்பு அரவை இலக்கை எட்ட முடியாமல், ஆலை நிர்வாகம் திணறி வருகிறது.



நாளை துவங்கும் நடப்பாண்டிற்கான அரவையிலாவது இலக்கை எட்ட முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆலையின் இயந்திரங்கள் நவீனப்படுத்துவதில் இழுபறி நீடிப்பது தான் காரணம் என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருவாலங்காட்டில் இயங்கி வருகிறது.



இந்த ஆலைக்கு திருத்தணி, ஆர்.கே.பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை, அரக்கோணம் மற்றும் சாலை உட்பட ஏழு கரும்பு கோட்ட அலுவலகங்களில் இருந்து, 2,100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது கரும்புகளை வெட்டி லாரி, டிராக்டர்கள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.ஆண்டுதோறும் ஆலை நிர்வாகம், விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ள பரப்பை கணக்கெடுத்து, கரும்பு அரவை இலக்கை செய்யும்.ஆனால், 14 ஆண்டுகளாக நிர்ணியித்த இலக்கை, இதுவரை எட்ட முடியவில்லை. இதற்கு காரணம், ஒரு நாளைக்கு, 2,500 டன் கரும்பு அரவை செய்யும் இயந்திரங்கள் இருந்தன. தற்போது இயந்திரங்கள் பழுது மற்றும் பராமரிப்பு இல்லாததால், சில ஆண்டுகளாக ஒரு நாளைக்கு, 1,800 - 2000 டன் கரும்பு மட்டுமே அரவை செய்ய முடிகிறது.இயந்திரங்கள் நவீனப்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்துக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதுவரை நடவடிக்கை எடுக்காமல் கூட்டுறவு ஆலையின் உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் துறை அமைச்சர் மெத்தனமாக செயல்படுவதாக கரும்பு விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்தாண்டிற்கான கரும்பு அரவை இலக்கு, 1.75 லட்சம் டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நாளை துவங்கும் நடப்பாண்டிற்கான கரும்பு அரவையிலாவது, நிர்ணயித்த இலக்கை எட்ட முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.



இலக்கை எட்டுவோம்இயந்திரம் சரி செய்யப்பட்டால் பிரச்னைகள் தீரும். கரும்பை உடனுக்குடன் எடை போட நடவடிக்கை எடுத்து உள்ளோம். வெட்டுக்கூலி ஆட்கள், 150 செட்டுகளாக பிரித்து தயாராக வைத்துள்ளோம். கரும்பில் சர்க்கரை கட்டுமானம் அதிகரிக்கவே மாதம் கணக்கீடு செய்து அரவை தேதி அறிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு நிர்ணயித்த இலக்கு கண்டிப்பாக எட்டப்படும். 'ரெக்கவரி' 1 சதவீதம் கூடுதலாக கிடைக்கும்.எஸ்.மலர்விழி, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைமேலாண் இயக்குனர்.இலக்கு, அரவை செய்த விபரம் (லட்சம் டன் கணக்கில்)ஆண்டுகள் இலக்கு அரவை2007 -- 08- 3.75- 3.352008 -- 09- 3.01- 1.602009 -- 10 - 2.00- 0.872010 -- 11 - 1.80 - 1.662011 -- 12 - 3.15 - 2.552012 -- 13 - 3.00 - 2.572013 -- 14 - 3.02 - 2.962014- - 15 2.75 - 2.302015 -- 16- 2.50 - 2.342016 -- 17 - 2.20 - 1.122017 -- 18 - 2.50 - 2.202018 -- 19 - 3.60 - 2.592019 -- 20 - 1.75 - 1.252020 -- 21 - 1.75 - 1.30முன்கூட்டியே துவங்கணும்கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள இயந்திரங்கள், 1984ம் ஆண்டு நிறுவப்பட்டவை. இதனால் இலக்கு நிர்ணயித்தும், அந்தளவுக்கு அரவை செய்ய முடிவதில்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகள் கடந்த இரு ஆண்டுகளில், 3.25 லட்சம் டன் கரும்பை தனியார் மில்லுக்கு அனுப்பி உள்ளனர். ஆலையை நவீனப்படுத்தி இருந்தால் லாபம் ஈட்டியிருக்கலாம். மேலும், வெட்டிய கரும்புகளை உடனுக்குடன் வாகனங்களை அனுப்பி, கொண்டு சென்றால் கரும்பு எடை குறைவது தடுக்க முடியும்.மேலும், ஆண்டுதோறும், அரவையை அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கினால் இலக்கை எட்டுவதற்கு வசதியாக இருக்கும். இயந்திரங்கள் நவீனப்படுத்த வேண்டும்.எல். ஜெயசந்திரன், 56, கரும்பு விவசாயி, பள்ளிப்பட்டு.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X