விவசாயிகளை அச்சுறுத்தும் ஆப்ரிக்க நத்தைகள் : கட்டுப்படுத்தவது எப்படி ?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
08:55


கோவை : கோவையின் சில பகுதிகளில் கொத்துக்கொத்தாக காணப்படும் ஆப்ரிக்க பெரு நத்தைகள், மிக வேகமாக இனப்பெருக்கம் செய்து, விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகின்றன.

கோவை மாவட்டம், காரமடை, வெள்ளியங்காடு, தோலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆப்பிரிக்க பெருநத்தைகள் அதிகம் காணப்படுகின்றன.ஆப்ரிக்க நத்தைகளைக் கட்டுப்படுத்துவது குறித்து, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச சங்கத்தின் (ஐ.யூ.சி.என்), தெற்காசிய, முதுகெலும்பற்ற உயிரினங்கள் ஆய்வுக் குழுவின் இணைத் தலைவர், அய்யாசாமி டேனியல் கூறியதாவது :

'அகாடினா பியூலிகா' என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த வகை நத்தைகள், கென்யா, தான்சானியா உள்ளிட்ட கிழக்கு ஆப்ரிக்க பகுதியைச் சேர்ந்தது.கடந்த 1871ல் கொல்கட்டா, பரக்பூரில் விலங்கியல் பூங்காவில் காட்சிப்படுத்துவதற்காக, ஆங்கிலேயர் ஒருவரால் கொண்டு வரப்பட்டது. தற்போது, ம.பி., தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் தென்படுகின்றன.

விவசாயிகளின் எதிரி
இந்தியாவில் மொத்தம் 5017 வகை நத்தைகள் உள்ளன. இவற்றில் 1103 வகை நத்தைகள் தரைவாழ்விகள். பொதுவாக, 7 செ.மீ. அகலம், 20-22 செ.மீ., நீளமுடையது. நன்கு வளர்ந்த நத்தை 200 -முதல் -250 கிராம் எடை இருக்கும். 3 - 6 ஆண்டுகள் உயிர் வாழும். போதுமான ஈரப்பதம், உணவு இல்லாவிட்டால், 2 ஆண்டுகள் வரை, ஓட்டுக்குள் உடலைச் சுருக்கிக் கொண்டு, ஆழ் உறக்கத்துக்குச் சென்றுவிடும்.மழை வந்ததும் மீண்டு விடும். 200 முதல் 900 முட்டைகள் இடும். ஏறத்தாழ அனைத்து முட்டைகளும் பொரித்து விடும்.

குறுகிய நேரத்தில் அதிக பரப்பிலான வேளாண் பயிர்களை தின்று தீர்த்து விடும்.எந்த வகை இலை, தழையாக இருப்பினும் உண்ணும். சுண்ணாம்புச் சத்துக்காக, கான்கிரீட்டில் உள்ள சில பகுதிகளையும் உண்டு செரிக்கும் திறன் கொண்டவை.கட்டுப்படுத்துவது எப்படி இந்த வகை நத்தைகளை பூச்சி கொல்லிகளைப் பயன்படுத்தி அழிப்பது சிரமம்.

புகையிலையை நீரில் போட்டு சாறு எடுத்து, காப்பர் சல்பேட் கரைசலுடன் சேர்த்து, தெளித்து கட்டுப்படுத்தலாம்.நன்னீர் வாழ்வி என்பதால், உப்பைத் துாவி, கட்டுப்படுத்தலாம். ஆனால், மண் வளம் பாதித்துவிடும் எனவே, பப்பாளி, முட்டைக்கோஸ் நத்தை விரும்பி உண்ணும் என்பதால் குழி தோண்டி, இந்த இலைகளைப் போட்டு, கவர்ந்து இழுத்து அழிக்கலாம்.

மேலும், பூச்சிக் கொல்லி பயன்படுத்தாமல், மனித உழைப்பில் சேகரித்து, அழிப்பதே இப்போதைக்கு நல்ல வழிமுறை.சேகரித்து அழிப்பதன் மூலம், மற்ற வகை நத்தைகளும் பிற சிறு உயிரினங்களும் பாதிப்படையாமல் காக்கலாம்.

நன்மை
பருவநிலையை முன்கூட்டிக் கணிப்பதில் வல்லவை. பெரும் மழையை முன்கூட்டியே உணர்ந்து, உயரமான கட்டடங்கள், மரங்களின் உச்சிக்கோ ஏறிவிடும்.இருதயநோய்க்கு மருந்துஎடுக்கும் ஆய்வுகளும் நடக்கின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
09-டிச-202120:53:31 IST Report Abuse
Sai கட்டுப்படுத்தவது எப்படி? நல்ல சிந்தனைதான் அதைவிட முக்கியமாக இவை இங்கு வந்ததெப்படி என்பதையும் NIA போன்ற முக்கிய அமைப்புகள் இறங்கி ஆராய வேண்டும் THAT IS VERY SERIOUS
Rate this:
Cancel
shakti - vilupuram,கோட்டி டி'ஐவைரி
07-டிச-202113:33:49 IST Report Abuse
shakti ஆப்ரிக்காவில் இந்த நத்தைகளை பிடித்து சமைத்து உண்கிறார்கள் .. மூலத்திற்கு நல்ல மருந்து ..கொன்று தீர்ப்பதை விட , தின்று தீர்ப்பது நல்லது என்கிறார்கள் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X